Friday, June 10, 2011

ஒவ்வொரு 16 வாரத்திற்கும் ஒரு புதிய பிரவுசர்

பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியானவுடன், மொஸில்லா, தன் பிரவுசரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரை ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் போவதாக அறிவித்திருந்தது. தற்போது மொஸில்லா தன் திட்டத்தினைத் தெரிவித்துள்ளது.
கூகுளின் அறிவிப்பிற்குப் போட்டியாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதா? என்று மொஸில்லா நிறுவன ஆய்வு மைய அலுவலரைக் கேட்ட போது, புதிய வசதிகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கூறினார்.

0 comments:

Post a Comment