Free software,Technilogy news,General news,Medical news,Medical tips,Blogger tips,Facebook tips,tamil video and audio chating site.
Thursday, June 23, 2011
கூகுலுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம்.
புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.புத்திசாலி கழுதை என்னும் பொருள்படும் அதன் பெயர் மட்டும் அதற்கு காரணம் அல்ல.கூகுலுக்கு பதிலாக இணையவாசிகள் தன்னை
பயன்படுத்துவார்கள் என்னும் அதன் நம்பிக்கையும் தான் காரணம்.
கூகுலுக்கு போட்டியாக முளைத்த எண்ணற்ற தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்ட நிலையில் புதிதாக முளைத்துள்ள இந்த ஸ்மார்ட்ஆஸ் கூகுலைவிட மேம்ப்பட்ட தேடியந்திரம் என்ற சொல்வதற்கில்லை.தேடல் உலகை பிரட்டிப்போடக்கூடிய புதிய தொழில்நுட்பம் இதன் வசம் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனால் கூகுலைப்போல விளம்பர நோக்கிலான முடிவுகள் இல்லாமல் தேடல் முடிவுகளை மட்டுமே இணைவாசிகளுக்கு முன்வைப்பதை ஸ்மார்ட் ஆஸ் தனது தனிச்சிறப்பாக கருதுகிறது.கூகுல் தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும் திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் ஸ்மார்ட் ஆஸ் பலரும் இந்த நிலையில் மாற்றம் தேவை என்று விரும்புவதாகவு தெரிவிக்கிறது.அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு ஸ்மார்ட் ஆஸ் உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுலுக்கு பழகியவர்கள் அதிலிருந்து விலகி வர இந்த வாதம் மட்டுமே போதுமா என்று தெரியவில்லை.
ஆனால் ஸ்மார்ட் ஆஸிடம் இந்த நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.தேடலுக்கு மட்டும் அல்ல இமெயில்க்கும் கூட இணையவாசிகள் தனது சேவையை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆஸ் மெயில் சேவையையும் துவக்கியுள்ளது.பெயருக்கு பின் ‘ஸ்மார்ட் ஆஸ்’ என்று முடியும் இமெயில் சேவையை யார் விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறி தான்?
ஆனால் ஒன்று இந்த தேடியந்திரம் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.ஆஸ்க் ஜீவ்ஸ் தேடியந்திரத்துக்கு அடையாளமாக ஜீவ்ஸ் பட்லர் இருந்தது போல இதற்கும் ஒரு புத்திசாலி கழுதை அடையாளமாக இருக்கிறது.அந்த கழுதை அவப்போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல விஷயங்களை கற்றுத்தரக்கூடும்.
அதோடு இணையவாசிகளுக்கு என்று போட்டியும் நடத்தப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது.இணையவாசிகள் சமர்பிக்கும் வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும் வாய்ப்பும் இருக்கிறது.அது மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல் இந்த தேடியந்திரத்தில் இணையவாசிகள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம்.
புதிய அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் ஸ்மார்ட் ஆஸ் தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது.
இந்த தேடியந்திரம் தகுதி வாய்ந்தது தானா என்று இணையவாசிகள் இதனை பயன்படுத்தி பார்க்கலாம்.
தேடியந்திர முகவரி www.smartass.com
0 comments:
Post a Comment