புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால்
குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி
செல்வோம்.ஆனால் இனி ஓன்லைன் மூலம் நம்
புகைப்படங்களின் அளவை அதிகரிக்க, சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது.
புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம். இதற்கு எந்தவொரு மென்பொருளின் துணையும் தேவையில்லை.
இத்தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற
விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க
வேண்டும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு Convert, Split, Crop என்ற மூன்று மெனு
தெரியவரும். இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து
Convert image என்பதை சொடுக்கினால் போதும்.
உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தரவிறக்கம்
ஆகிவிடும். Crop என்பதை சொடுக்கி நாம் தரவேற்றிய படத்தில் எந்த பகுதி
வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம்.
எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை.
0 comments:
Post a Comment