Wednesday, June 29, 2011

பிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி

உங்கள் பதிவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதியை அளித்து விட்டால் உங்கள் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். நமது இந்த Tamil5r வலைப்பூவின் ஒவ்வொரு இடுகையின் கீழும் 'தொடர்புள்ள இடுகைகள்' பகுதிக்கு கீழே பாருங்கள்.  'Download As PDF' என்ற வசதி இருக்கும்.




உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில் இந்த வசதியை கொண்டு வர உங்கள் வலைப்பதிவின் வார்ப்புரு நிரலில் சில வரிகளை சேர்த்தால் போதுமானது. உங்கள் பிளாகரின் டாஷ்போர்டு சென்று Layout --> Edit HTML கிளிக் செய்து கொள்ளுங்கள். தோன்றும் பக்கத்தில் 'Expand Widget Templates' என்ற ஆப்சனையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கிடைக்கும் வார்ப்புரு நிரலில் <data:post.body/> என்ற வார்த்தையை தேடுங்கள். அதன் கீழே, கீழ்காணும் வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.

<a expr:href='&quot;http://pdfmyurl.com?url=&quot; + data:post.url'>Download As PDF</a>


இப்போது 'Save Template' கிளிக் செய்து உங்கள் வார்ப்புருவை சேமித்து கொள்ளுங்கள். வேலை முடிந்தது.

இனி உங்கள் ஒவ்வொரு இடுகையின் கீழேயும் பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF' என்ற சுட்டியாக வழங்கப்பட்டு இருக்கும். அந்த சுட்டியை கிளிக் செய்யும் போது உங்கள் இடுகைப்பக்கம் பிடிஎப் கோப்பாக கணினியில் தரவிறக்கப்படும்.

0 comments:

Post a Comment