குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது எலி
போன்ற விலங்கினத்தில் இருந்து தோன்றியதாக தெரியவந்துள்ளது.
பாலூட்டி ஆன
அந்த விலங்கினத்தின் பெயர் ஜுராமயா சினென்சிஸ். இவை டயனோசரஸ் வாழ்ந்த
காலத்தில் வடகிழக்கு சீனாவில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இவற்றின் புதை படிவங்கள் சீனாவின் லியானிஸ் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
ஜுராமையா என்ற விலங்கினம் எலி போன்ற வடிவமைப்பு கொண்டது. இது மற்ற பாலூட்டிகளிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது.
உடல் முழுவதும் முடிகளை கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என
கருதப்படுகிறது. மரத்தில் ஏறக்கூடிய தகுதி பெற்று இருந்த அந்த விலங்கினம்
புதர்களிலும் வாழ்ந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment