Monday, October 31, 2011

விபச்சார விடுதிக்கு போக விருப்பமா? iPhone 4s உதவி செய்யும்!

பேச, எஸ்எம்எஸ் அனுப்ப, அலாரம் வைத்துக் கொள்ள  மட்டுமே செல்போன் பயன்பட்டது ஒரு காலம். அந்த செல்போன் இப்போது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்தி எடுத்துவிட்டது. பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட், போர்ட்டபிள் மீடியா பிளேயர், கேமரா, இடம் கண்டுபிடிக்க உதவும் ஜிபிஎஸ், மொபைல் இன்டர்நெட் வசதி.. உள்பட இன்னும்
என்னென்னவோ வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் தற்போது அதிகம் வந்துவிட்டன. ஸ்மார்ட்போன்கள் இயங்குவதற்கு ஏராளமான ஆபரேடிங் சிஸ்டம்களும் உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ், கூகுள் ஆண்ட்ராய்ட், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன், நோக்கியா சிம்பியன், பிளாக்பெரி ஓஎஸ்.. என இந்த வரிசையும் நீள்கிறது. ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் ‘சிரி’. கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்4எஸ்-சில் இந்த சாப்ட்வேர் உள்ளது.

பொதுவாக, ஜிபிஎஸ் வசதி என்பது இடம் கண்டுபிடிக்க உதவுகிறது. நாம் எந்த இடத்தில் நிற்கிறோம்.. நாம் போக வேண்டிய இடத்துக்கு அங்கிருந்து எந்த வழியாக செல்வது.. என ஜிபிஎஸ் மேப் உதவியுடன் தெரிந்துகொள்ள முடியும். இது மட்டுமின்றி, ஆப்பிள் ஐபோனில் சிரி சாப்ட்வேர் மூலம் செயல்படும் இன்னொரு சேவையும் வழங்கப்படுகிறது. போனில் ‘ஐம் ஹார்னி’ என்று சொன்னால் போதும்.. அடுத்த சில வினாடிகளில் அந்த ஏரியாவில் எங்கெங்கெல்லாம் விபசார விடுதிகள், கார்ல் கேர்ல்கள், இதற்கான ஏஜென்ட்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் முழு முகவரியுடன் வந்துவிடும். ஐம் ஹார்னி என்பதற்கு பதிலாக ‘டு ஐ மேக் யூ ஹார்னி’, ‘பேட் பாய். லுக்கிங் ஃபார் எஸ்கார்ட்ஸ்’ என்று சொன்னாலும் இந்த தகவல்கள் ஜிபிஎஸ் உதவியுடன் வருகின்றன. அமெரிக்காவில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தற்போது இந்த சேவையை பெற முடியும். காமெடிக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சோதனைகள் முடிந்த பிறகு, முழு வீச்சில் அறிமுகப்படுத்தப்படும் என்கின்றனர் ஆப்பிள் இன்ஜினியர்கள்.

0 comments:

Post a Comment