Saturday, November 26, 2011

தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம்

தினமும் 2 அல்லது 3 கப் காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படாமல் தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஊட்டச்சத்து மற்றும் நோயில்துறை பேராசிரியர் எட்வர்டு ஜியோவன்னுசி தலைமையிலான குழுவினர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

காபி குடிக்கும் பழக்கத்துக்கும், புற்றுநோய் உருவாவதற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி இந்த குழுவினர் 67,470 பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமும் 4 கப்புக்கும் அதிகமாக காபி குடித்தவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதமும், 2 முதல் 3 கப் வரை குடித்தவர்களுக்கு 7 சதவீதமும் குறைந்திருந்தது தெரியவந்தது.
காபின் என்ற பொருள் நீக்கப்பட்ட காபியை தினமும் 2 கப் குடித்தவர்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் குறைந்து இருந்ததும் தெரியவந்தது.
மேலும் காபியில் இன்சுலின் இருப்பதால் நீரிழிவுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைவு என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜியோவன்னுசி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment