
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் நாம் அமைத்திடும் டெக்ஸ்ட் எழுத்துப் பிழை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. தவறுகள் இருப்பின், அவை சிகப்பு நெளிவான கோடுகளில் காட்டப்படுகிறது. ஆனால் இவற்றை நாம் விரும்புவதில்லை. ஏனென்றால், மற்றவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதைக் காட்டவே பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், அப்போது இந்த தவறுகள் சுட்டிக் காட்டப்படுகையில், பார்ப்பவர்களின் கவனம், நாம் சொல்லிக் கொண்டு வரும் தகவல்களிலிருந்து, வேறு பக்கம் திரும்ப வாய்ப்புண்டு. எனவே இதனைத் தவிர்க்க விரும்புவோம். ஆனால், பிழைகளைத் தெரிந்து கொண்டு அவற்றைத் திருத்தி அமைக்கவும் வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிழைதிருத்தும் ஸ்பெல் செக்கர் வசதியை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். ஸ்பெல் செக்கர் வசதியை முடக்கிவிடாமல், நாம் விரும்பும் நேரத்தில் அதனைக் கொள்ளும் வகையில் அமைக்கலாம்.
இதற்கு Office பட்டனை அழுத்தி File டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options என்ற பிரிவிற்குச் செல்லவும். இதனுள்ளாக, Proofing category என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When correcting spelling in Power Point என்ற பிரிவில், Hide spelling errors என்று தரப்பட்டுள்ள இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இனி நீங்கள் மீண்டும் ஸ்பெல்லிங் செக் இயக்காதவரை, எழுத்துப் பிழைகளுக்கான கோடுகள் காட்டப்பட மாட்டாது.
0 comments:
Post a Comment