மவுஸ் இன்று கணணியின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறி விட்டது. மவுஸ்
இல்லாமல் கணணியின் இயக்கத்தை சிறிதும் எண்ணிப் பார்க்க இயலாது.
விண்டோஸ் இயக்கத்தில் மவுஸ் பேனலில் புதிய வசதி தரப்பட்டுள்ளது. மவுஸால் கோப்பை சில நொடிகள் கிளிக் செய்திடலாம்.
பின் அப்படியே அந்த கோப்பை மவுஸ் பிடித்துக் கொள்ளும். நீங்கள் விரல்களை
அல்லது கையை எடுத்துவிடலாம். அப்போது உங்களது கோப்பு மவுஸுடன் தானாக லாக்
ஆகிவிடும்.
இதன் பின் உங்கள் மவுஸை அதன் பட்டனைப் பிடித்து அழுத்தாமல், அதனை
மட்டும் இழுத்து கோப்பை வேண்டிய இடத்தில் விட்டுவிடலாம். இந்த வசதியை
பெறுவதற்கு முதலில் Start பட்டன் அழுத்தித் திறக்கவும்.
பின் Classic View ஐத் திறக்கவும். கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Classic View வினைக் கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
Category வியூவில் இருந்தால் மாற்றிக் கொள்ளவும். இந்த பட்டியலில் Mouse
ஐகானத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Mouse Properties விண்டோ கிடைக்கும்.
இந்த விண்டோவின் மேலாக உள்ள டேப்களைக் காணவும். Buttons என்று ஒரு டேப்
காணப்படும்.
இந்த விண்டோவின் கீழ்ப்பகுதியைப் பார்க்கவும். இங்கு தான் Click Lock
Properties காணப்படும். இதில் “Turn On ClickLock.” என்று இருப்பதில் டிக்
அடையாளம் ஏற்படுத்தவும்.
இப்போது கிளிக் லாக் செட்டிங்ஸ் பட்டன் தெரியும். இதில் கிளிக் செய்தால்
ஒரு சிறிய விண்டோ எழுந்து வரும். இதுதான் கிளிக்லாக் செட்டிங்ஸ் விண்டோ.
இதில் ஒரு பார் இருக்கும்.
இந்த பாரில் செட் செய்வதன் மூலம்(Short > Long) மவுஸ் உங்கள்
ஆப்ஜெக்டை எவ்வளவு நேரம் உங்களுக்காகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதனைத் தீர்மானிக்கலாம். நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்
என்றால் Long என்பதை செலக்ட் செய்திடலாம். ஒன்றை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
இந்த கோப்பு அல்லது ஆப்ஜெக்ட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் வேலையை
நீங்கள் உங்கள் மவுஸ் மூலம் பிடித்துக் கொள்ளவில்லையே தவிர, அதனை அதற்கென
உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.
இதனை சோதனை செய்திட Short அருகே ஒரு புள்ளியில் செலக்ட் செய்து பின்
மவுஸால் விண்டோவின் மேல் பாரில் கிளிக் செய்து பின் மவுஸை மட்டும்
நகர்த்துங்கள்.
விண்டோ நகர்வதனைப் பார்க்கலாம். மவுஸின் பட்டனை அழுத்தாமல் விண்டோ
நகர்வது ஆச்சரியமாக இல்லை, Long தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்திற்கு
முன்பாகவே ஆப்ஜெக்டை விட வேண்டும் என்றால் நீங்களாக மேனுவலாக பட்டனைக்
கிளிக் செய்து மேற்கொள்ள வேண்டும்.
இந்த கிளிக் லாக் செட்டிங்ஸ் முடித்து அனைத்து ஓகே பட்டன்கள் மீதும்
கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி மவுஸுக்கு கோப்பு தூக்கும் வேலையைக்
கொடுங்கள்.
0 comments:
Post a Comment