Monday, June 20, 2011

எச்.டி.சி. சல்சா மொபைல் அறிமுகம்


எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உலகக் கருத்தரங்கில் அறிமுகமான சல்சா மொபைல், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வரவேற்கும் செய்தியாக உள்ளது. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் தளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320x480 ஆகும். இதன் ப்ராசசர் 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. பயன்பாட்டு நினைவகம் 512 எம்பி மற்றும் மாறா நினைவகம் 512 எம்பி தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத் தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஆட்டோ போகஸ், முகம் அறிந்து போட்டோ எடுத்தல், இடம் சுட்டுதல், எல்.இ.டி. பிளாஷ் ஆகியவற்றுடன் 5 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட இதனால் போட்டோ எடுக்க முடியும். முன்புறம் மற்றொரு விஜிஏ கேமரா உள்ளது. இதன் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
இந்த போனில் 3ஜி சேவை, GPRS, EDGE, WiFi, Bluetooth 3.0 மற்றும் GPS with AGPS ஆகிய தொழில் நுட்பங்கள் மூலம் இயங்குவது, வாடிக்கையாளர்களுக்கு இதனைப் பயன் படுத்து வதனை எளிதாக்குகிறது. இதில் நான்கு பேண்ட் அலைவரிசை இயக்கம் இருப்பதால், உலகின் எந்த நாட்டிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
இந்த போனில் 1520 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 585 நிமிடங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். பயன்படுத்தா விட்டாலும் 465 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்கிறது. இதன் எடை 120 கிராம். அளவு பரிமாணங்கள் 5.89x1.23x10.91 செ.மீ. பேஸ்புக் தளத்தினை அதிகம் பயன்படுத்துவோர் , அதற்கென தனியே ஒரு கீ இருப்பதால், ஆர்வத்துடன் இந்த போனை வாங்கிட விரும்பலாம்.
இதே போன்ற இன்னொரு மொபைல் போனை எச்.டி.சி.நிறுவனம் சாச்சா (Chacha) என்ற பெயரில் விரைவில் வெளியிட இருக்கிறது.

0 comments:

Post a Comment