Wednesday, June 15, 2011

சார்ஜ் இல்லாமல் சார்ஜ்!


அரை மணிநேரம் பேசினாலே என் செல்போனில் சார்ஜ் இறங்கிப் போய்விடுகிறது என்று புலம்புகிறவரா நீங்கள்? உங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது புதிய வகைக் கைபேசி.

பேசினாலே பேட்டரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி கைத்தொலைபேசியின் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவற்றின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் சார்ஜ் ஏற்றலாம்.

சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தகைய கைத்தொலைபேசியைக் கண்டுபிடித்திருக்கிறார். மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இக் கைத்தொலைபேசிகளில் தானாகவே சார்ஜ் ஏற்றப்படுகிறது.

0 comments:

Post a Comment