Sunday, June 26, 2011

பிடிஎப் கோப்புக்களை மிக சுலபமாக தேடுவதற்கு

ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம்.
இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.
ஒரு காரணம் இணையவாசிகளுக்கு பிடிஎப் கோப்பு என குறிப்பிட்டு தேடும் கஷ்டத்தை கூட தராமல் இந்த கோப்புகளை தேடித்தரும் விருப்பமாக இருக்கலாம்.
என்ன தான் இருந்தாலும் நேரடியாக நாம் விரும்பும் வடிவிலான தகவல்களை மட்டுமே தேட முடிவது ஒரு அணுகூலம் தானே. அதோடு கூகுள் போன்ற தேடியந்திரங்களில் என்ன தான் பிடிஎப் கோப்புகள் என்று குறிப்பிட்டாலும் முடிவுகள் முழுவதும் பிடிஎப் சார்ந்ததாகவே இருக்கும் என்று உத்திரவாதமில்லை.
நெல்லில் கலந்த பதர் போல வேறு விதமான தகவல்களும் கலந்திருக்கலாம். இதற்கு மாறாக பிடிஎப் தேடியந்திரங்களில் தேடும் போது பிடிஎப் கோப்புகளை மட்டுமே பெற முடியும்.
ஆனால் ஒன்று பெயருக்கு தான் அவை பிடிஎப் தேடியந்திரங்களே தவிர உண்மையில் அவை பிரத்யேக பிடிஎப் தேடியந்திரங்கள் இல்லை. பெரும்பாலும் கூகுளின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்ப‌டுத்தியே பிடிஎப் கோப்புகள் பட்டியலிடப்படுகின்ற‌ன.
கூகுளில் உங்கள் சார்பில் பிடிஎப் தேடலில் ஈடுபடுவதாக வைத்து கொள்ளலாம். அந்த வகையில் சர்ச் பிடிஎப் பைல்ஸ் பிடிஎப் தேடியந்திரத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் கூகுளுக்கு மாறாக யாஹுவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோப்புகளை இது தேடித்தருகிற‌து.
பயனாளிகளுக்கு நட்பான பிடிஎப் தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் இது இணையவாசிகள் தட்டச்சு செய்யும் குறிசொல்லுக்கு பொருத்தமான கோப்புகளை நொடிப்பொழுதில் பட்டியலிடுகிறது.
தேடல் முடிவுகளில் உள்ள கோப்புகளை அப்ப‌டியே முன்னோட்டம் பார்க்கும் வசதியும் உண்டு. தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

0 comments:

Post a Comment