வானத்தில் இருக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த செல்லப் பிராணிகளின் வடிவம் அல்லது நாம் விரும்பும் எந்த வடிவத்தையும் வரையலாம்.
வானத்தில் பார்க்கும் அழகான மேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவத்தை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது நமக்கு தெரிந்த ஒன்று தான்.
ஆனால் வானத்து மேகங்களில் நாம் விரும்பும் வடிவத்தை வரைய முடியுமா என்று நினைப்பவர்களுக்கு ஆம் வரையலாம் நாம் விரும்பும் வடிவத்தை ஓன்லைன் http://www.blogger.com/img/blank.gifமூலம் மேகத்தில் வரையலாம் நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று Get Started என்ற பொத்தானை சொடுக்கி ஆரம்பிக்கலாம். அடுத்துவரும் திரையில் இருந்து Pick a Cloud என்பதை சொடுக்கி மேகத்தை தேர்ந்தெடுக்கலாம். அடுத்தடுத்து இருக்கும் வண்ணம் மற்றும் பிரஷ் போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து மேகத்தில் நம் கைவண்ணத்தை காட்ட வேண்டியது தான்.
எளிதாக எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஓன்லைன் மூலம் மேகத்தில் வடிவத்தை செதுக்கலாம். எல்லாம் வரைந்து முடித்தபின் அதை JPG படமாக நம் கணணியில் சேமித்து வைக்கலாம்.
0 comments:
Post a Comment