
விண்காம் நிறுவனம் அண்மையில் டபிள்யூ 253 என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் மொபைல் போன்களை அனைவரும் தேடி, விரும்பி வாங்குவதால், அனைவரும் வாங்கும் விலையில் இதனைத் தந்துள்ளது.
இதன் வடிவமைப்பு மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, வெப் கேமராவாகவும் பயன்படுத்தலாம். இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயக்கம், மியூசிக் பிளேயர், பாடல்களைப் பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, ஜாவா மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்ப வசதி, புளுடூத் வசதி, 16 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வழி, இந்தி மொழி பயன்பாடு, 500 முகவரிகள் பதியக் கூடிய அட்ரஸ் புக்,
1000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இந்த போனின் சிறப்பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.1,895.
0 comments:
Post a Comment