Friday, June 10, 2011

இரண்டு சிம்களுடன் நோக்கியா போன்கள்


இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு சிம் போன்களை வெளியிட இருப்பதாக, நோக்கியா அறிவித்திருந்தது. அவை இந்த காலாண்டில் இந்தியா மற்றும் சீனாவில் அறிமுகமாக இருக்கின்றன. நோக்கியா எக்ஸ் 1-01 என்ற இந்த போன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டி.எப்.டி. வண்ணத்திரை 1.8 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாண அளவுகள் 112.2 x 47.3 x 16 மிமீ. எடை 91.5 கிராம். இரண்டு சிம் பயன்பாடு, இரண்டிற்கும் ஸ்டேண்ட் பை வசதியுடன் தரப்படுகிறது. இதன் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். 250 எஸ்.எம்.எஸ். செய்திகளைப் பதியலாம். ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. டார்ச் மற்றும் மியூசிக் பிளேயருக்கென தனி கீகள் உள்ளன. 1320 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 786 நிமிடங்கள் பேசும் திறனை அளிக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 43 நாட்களுக்கு மின் சக்தி தங்குகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் மியூசிக் பிளேயரை இயக்க முடிகிறது. அதிக வால்யூம் வைத்தாலும், ஸ்பீக்கர் மிகவும் தெளிவாக இசையை அளிப்பது இதன் சிறப்பாகும். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனித்தனியே லோகோ, அடையாள இசை, ரிங் டோன் வைத்துக் கொள்ள வசதி அளிக்கப்பட்டுள்ளது. சிகப்பு, கடல் நீலம், இளஞ்சிகப்பு, டார்க் கிரே மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும். இதன் விலை ரூ.2,100 என்ற அளவில் இருக்கலாம்.
நோக்கியாவின் அடுத்த இரண்டு சிம் போன் நோக்கியா C2-00 . இதன் அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக தகவல்கள் இல்லை. இதுவும் வரும் மூன்று மாதங்களில் இங்கு அறிமுகமாகும்.

0 comments:

Post a Comment