Thursday, June 9, 2011

திரையைக் கிள்ளி தெளிவாப் பார்க்க


அண்மையில் ஸென் மொபைல் நிறுவனம் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன் ப்ளிக் எம்45 (Flikk M45) என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. விரைவில் விற்பனைக்கு இது கொண்டு வரப்படும். 240 x 320 பிக்ஸெல் திறனுடன் உள்ள இதன் ஸ்கிரீன், பெதர் டச் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா மிக அருமையான படங்களை எடுக்கவும், வீடியோ இயக்கவும் உதவுகிறது. இதன் திரையினை இரு விரல்களால் கிள்ளி, போட்டோக்களைச் சுருக்கவும் விரிக்கவும் முடிகிறது. நாமாக பல விட்ஜெட்டுகளை அமைத்து, இயக்கங்களை விரல் நுனியில் கொண்டு வரலாம். கையெழுத்தினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக அமைக்கக் கூடிய தொழில் நுட்பமும் உள்ளது. எம்பி4 மற்றும் எம்பி 3 பிளேயர்கள், இசை ரசிகர்களுக்கு உதவுகிறது. இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்க வாய்ப்புண்டு.

0 comments:

Post a Comment