மனசு ரொம்ப டென்ஷனா இருக்கா. மன உளைச்சலால் பாதிப்பா. இருக்கற சில்லரைய
அள்ளி பாக்கெட்ல போட்டுக்கிட்டு ஷாப்பிங் போங்க. உளைச்சல் எல்லாம் ஓடிப்
போய் விடுமாம்.
எதிர்பார்ப்பில் ஏமாற்றம், தொடர் பிரச்னைகளால் மன உளைச்சல் ஏற்படுவது இயற்கை. இது தொடர்ந்தால் உடல் நலம் பாதிப்படையும்.
இதில் இருந்து விடுபட மாறுபட்ட சிந்தனை மற்றும் சூழ்நிலை தேவை என்கின்றன
பல ஆய்வு முடிவுகள். மருத்துவ சிகிச்சையும், எளிய பயிற்சிகளும் அவசியம்
என்றும் அவை வலியுறுத்துகின்றன.
தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் போது தனிமையில் இருப்பதை தவிர்க்க
வேண்டும். இது எதிர்மறை சிந்தனைகளை தூண்டி செயல்பட வைத்து விடும். அதிக மன
உளைச்சல் பாதிப்புள்ளவர்கள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் அடிக்கடி
நிகழ்வதை பார்க்கலாம். தற்கொலை செய்து கொண்டவர்களின் மருத்துவ குறிப்புகளை
ஆராய்ந்ததில் இது உறுதியாகி உள்ளது.
மன உளைச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெறுபவர்கள் பட்டியலிடப்பட்டு
அவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. டென்ஷனில் இருந்த விடுபட
அவர்கள் பல வழிமுறைகளை கையாள்வது தெரிந்தது.
இதில் சுமார் 62 சதவீதம் பேர் ஷாப்பிங் சென்றால் மன உளைச்சல் பாதிப்பில்
இருந்து உடனடியாக விடுபடுவதாக தெரிவித்துள்ளனர். 28 சதவீதம் பேர்
விழாக்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாக பொழுதை கழிப்பதால் இந்த
பாதிப்பு குறையும் என்கின்றனர்.
இதை ரீடெய்ல் தெரபி பர்சேஸ் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
டென்ஷனையும் மன உளைச்சலையும் குறைக்கத்தானோ என்னவோ "இலவசம்" என்ற
தூண்டிலைப் போட்டு மக்களை ஷாப்பிங்கில் குவிய வைத்து விடுகின்றனர் வியாபார
நுணுக்கம் தெரிந்தவர்கள்.
0 comments:
Post a Comment