Monday, June 20, 2011

உங்களுடைய சந்தேகங்களுக்கான தீர்வுகளை பெற

முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன. பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது, மிகவும் எளிமையானது.

மற்ற ஆலோசனை கேட்பு தள‌ங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக‌ கேட்க வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்ற‌ன.

இந்த தளம் அத்தனை தீவிர‌மான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி கேட்க சொல்லி அதற்கு ஆம் இல்லை என நெத்தியடியாக‌ பதில் சொல்கிற‌து.

உதாரணத்திற்கு இன்று மாலை சினிமாவுக்கு செல்லலாமா வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தால் சினிமாவுக்கு போலாமா என கேள்வியாக‌ கேட்டால் ஆம் அல்லது இல்லை என பதில் தருற‌து. கேள்வியின் தன்மையை ஆய்வுக்குள்ளாக்காமல் கணணி புரோகிராம் அடிப்பையில் ஒரு பதிலை முன் வைக்கிறது.

அந்த பதிலை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். முடிவெடுக்க முடியாமல் திண‌றுபவர்கள் தாராளமாக இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். நண்பர்களிடம் இரண்டு கையில் ஒன்றை தொடு என்று சொல்ல சொல்லி முடிவெடுப்பது போல இதை பயன்படுத்தலாம்.

ஆனால் முக்கியமான பிரச்ச‌னைகளுக்கு இந்த முறை சரிபட்டு வராது. சும்மா ஜாலியாக பயன்படுத்த‌லாம். மனதிலே குழப்பாமா? என்று கேட்ச்கும் நிலை இருந்தால் அதிலிருந்து தெளிவு பெற ஆலோசனை கேட்பு தள‌ங்களை பயன்படுத்தலாம். இப்படி ஆலோசனை கேட்கவும் பிரச்சனை குறித்து விவாதிக்கவும் இணையம் கைகொடுப்பது மகிழ்ச்சியை தரலாம்.

ஆனால் எல்லாவற்றையும் இணையத்திற்கு கொண்டு வருவது சரியா என சிலhttp://www.blogger.com/img/blank.gifர் கேட்கலாம். இணையம் மூலம் வாழ்க்கை பிரச்சனையை விவாதிப்பது முறையா என கேட்கலாம். அந்த வகையில் பார்த்தால் ஆலோசனை கேட்பதை கொஞ்சம் விளையாட்டுதனமாக மாற்றியிருக்கும் இந்த சேவை சுவாரஸ்யமானது. எந்த தீங்கும் இல்லாதது.

இன்னும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஆம் இல்லை என்று மட்டுமே பதில் தருவதாக சொல்லும் இந்த தளத்தில் இந்த சேவையை நம்பலாமா என்று கேட்டால் இல்லை வேண்டாம் என்று பதில் வருகிற‌து.

இணையதள முகவரி

0 comments:

Post a Comment