வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெருங்காயம் நல்ல கை மருந்தாக விளங்குகிறது.
பெருங்காயத்தை நீரில் இழைத்து வயிற்றின் மீது பற்றுப் போட்டு வர வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயம் கைப்பு சுவை உடையது. பெருங்காயத்தை உணவில்
சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம், வாத குடைச்சல்,
நாக்குப் பூச்சி பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெருங்காயம்
மருந்தாக அமைவதே.
வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு
பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம்
குறையும்.
செரியாமை, மந்தம், புளியேப்பம், வாய்ப்பு, வயிற்றுவலி
போன்றவற்றிற்கு பொரித்த பெருங்காயம், உலர்ந்த துளசி இலை சம
அளவு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
அதில் ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொண்டு வர மேற்கூறிய பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து விடும்.
0 comments:
Post a Comment