தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.
அதாவது
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால் இந்த விடயத்தில் ஸ்ட்ராபெரி
பழம் ஆப்பிளையே மிஞ்சும்
என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம்(சி.எப்.எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.
ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு
பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு
உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில்
ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத
எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி
மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள்
வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.
இதுகுறித்து விஞ்ஞானி பம் மஹர் கூறுகையில்,"இது சர்க்கரை நோய், புற்று
நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும்
தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத்
தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது" என்றார்.
0 comments:
Post a Comment