Sunday, July 3, 2011

சொக்லேட் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது: ஆய்வில் தகவல்

குழந்தைகள் சொக்லெட் சாப்பிட்டால் பிற்காலத்தில் அவர்கள் உடலில் கொழுப்பு அதிக அளவில் சேருவது தடுக்கப்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சொக்லெட் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நம்பிக்கை தவறானது என்று லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகளை சிறுவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து லூசியானா பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் 2 வயது முதல் 18 வயது வரையிலான 11 ஆயிரம் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர், இளம்பெண்களிடம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள், சிறு பிள்ளைகள் சொக்லெட் உள்ளிட்ட இனிப்புகள் சாப்பிடுவதால் பிற்காலத்தில் அவர்களது உடலுக்கு நன்மையே ஏற்படுகிறது. தொடர்ந்து சொக்லெட் சாப்பிடும் பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுக்கப்படுவதுடன் அதிக எடை, உடல்பருமன் உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. ஆய்வில் பங்கெடுத்த 26 சதவீத பிள்ளைகள் அதிக சொக்லெட்கள் சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு உடல் எடையோ, உடற்பருமனோ ஏற்படவில்லை. குறைவாக சொக்லெட் சாப்பிட்ட பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்பட்டன. மேலும் அவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளும், மரபு ரீதியான நோய்களும் ஏற்பட்டன.

0 comments:

Post a Comment