Tuesday, July 5, 2011

உலகில் வாழ்ந்த மிகச் சிறிய டைனோசர் கண்டுபிடிப்பு

டைனோசர் என்றாலே நமக்கு பிரமாண்ட உருவம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் பொழுதுபோக்காக பழங்கால கற்படிவங்களைச் சேகரித்து வந்த ஒருவர் உலகின் குட்டி டைனோசரின் கற்படிவத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால் அந்தக் கற்படிவத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இரண்டாண்டுகளாக தனது மேஜை டிராயரில் போட்டு வைத்திருந்திருக்கிறார்.
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பெக்ஸ்ஹி
ல் பகுதியைச் சேர்ந்த 51 வயதான அந்த நபரின் பெயர் டேவ் பிராக்ஹர்ஸ்ட். தனது வீட்டுக்கு அருகே உள்ள கை விடப்பட்ட செங்கற்சூளை அருகே நடந்து சென்ற போது காலடி அளவே உள்ள டைனோசரின் கற்படிவத்தைக் கண்டுபிடித்தார்.
அதை வீட்டுக்கு எடுத்து வந்தாலும் அதன் முக்கியத்துவம் அறியாமல் சாதாரணமாகப் போட்டு வைத்திருந்தார். பின்னர் யதார்த்தமாக கற்படிவ நிபுணர்களிடம் அதைப் பற்றிக் கூறிய போது தான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர்களிலேயே மிகச் சிறிய, பறக்க இயலாத டைனோசரின் கற்படிவம் அது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
"அந்தக் கற்படிவத்தில் ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அது என்னவென்று தான் எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே டிராயரில் போட்டு வைத்திருந்தேன்" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் டேவ்.
இறக்கை கொண்ட இந்தக் குட்டி டைனோசர் பறவை போல இரண்டு கால்களில் நடந்து திரிந்திருக்க வேண்டும். குட்டையான வாலும், நீண்ட கழுத்தும், நகங்கள் கொண்ட கை, கால்களையும் கொண்டிருக்க வேண்டும். 10 கோடி ஆண்டுகளுக்கு முன் இது காணப்பட்டிருக்க வேண்டும் என்று தொல்லுயிரின நிபுணர்கள் கணித்துள்ளனர்.

0 comments:

Post a Comment