இணைய சேவைகளை பெறும் போதோ அல்லது மின்னஞ்சல் கணக்குகளுக்கும் நாம் கடவுச்சொல்லை பயன்படுத்தி வருகிறோம்.
இத்தகைய
கடவுச்சொற்கள் பாதுகாப்பானதாக அமைதல் வேண்டும். ஏனெனில் உங்கள்
கடவுச்சொற்களை பயன்படுத்தி மற்றவர்கள் உங்கள் கணக்குகளை முடக்க முடியும்.
எனவே உங்கள் கடவுச்சொற்கள் மிக பாதுகாப்பனதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும்
அமைதல் வேண்டும்.
உங்கள் கடவுச்சொற்கள் எண்கள், எழுத்துக்கள் கொண்டு அமைதல்
சிறப்பானதாகும். உங்களின் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை அளவீடு
செய்யவும், மேலும் சிறப்பான கடவுச்சொற்களை உருவாக்கி கொள்ளவும் PASSWORD
METER என்ற தளம் உதவுகிறது.
இந்த தளத்தில் சென்று உங்கள் கடவுச்சொல்லை கொடுத்தால் உங்கள்
கடவுச்சொல்லின் பாதுகாப்பு தன்மையினை வீத அடிப்படையில் உங்களுக்கு
வழங்கும்.
அத்துடன் உங்கள் கடவுச்சொல்லில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களுக்கு
புள்ளி வழங்கப்படும். அதனைக் கொண்டு உங்கள் கடவுச்சொல்லை சீர் செய்து
பாதுகாப்பு மிக்கதாக மாற்றி கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment