Sunday, August 28, 2011

வைரங்களினால் ஆன கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளனர்.அவர்கள் செஷிர் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இருந்து சக்தி வாய்ந்த டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வான்வெளி வீதியில் வழக்கத்தை விட வித்தியாசமாக ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அதற்கு "புல்சர்" என பெயரிட்டு ஆராய்ச்சி செய்தனர். அது ஒரு புதிய கிரகம் என கண்டுபிடித்தனர்.

அவை சுழலும் சிறிய நட்சத்திரங்களால் ஆனது. அவை 10 மைல் சுற்றளவுக்கு ரேடியோ அலைகளை உமிழ்கின்றன. எனவே இந்தகிரகம் வைரத்தால் ஆன பாறைகளை கொண்டது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது பூமியில் இருந்து 4 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment