ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்தம் அங்குமிங்குமாக வேலைக்காக அலைந்துதிரிவது பெண்களின் மனநிலைக்குப் பாதிப்பேற்படுத்தும். ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு அல்ல.
பெண்கள் நாளாந்த வீட்டு வேலைகளையும் செய்து பிள்ளைகளையும் கவனித்துப்
பொறுப்புகளைக் கவனிப்பதால்தான் இவ்வாறு ஏற்படுகின்றது என்கின்றனர் பீல்ட்
பல்கலைக்கழகத்தனர்.
பெண்கள் குறிப்பாகப் பிள்ளைகள் உள்ளவர்கள் நாளாந்த வேலைகளுக்காகக்
கடைக்குச் செல்வது, பிள்ளைகளைப் பராமரிப்பு இல்லங்களிலிருந்து
ஏற்றியிறக்கும் வேலைகளைச் செய்வது போன்ற அதிகளவு வேலைகளைச் செய்கின்றனர்.
இதனால் ஏற்படும் மன அழுத்தத்தினால் தான் பெண்கள் நடைப்பயணங்களை
மேற்கொள்ளும் போது மிகவும் சிரமத்தை அனுபவிக்கின்றனர் என்கின்றனர் பீல்ட்
பல்கலைக்கழகத்தினர்.
இதில் ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளை விடும் பெண்களே இம் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment