டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல்
எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் வரிசையில்
புதிதாக பைபர் டிவீட் அறிமுகமாகியுள்ளது.
மற்ற சேவைகள் போல இல்லாமல்
பைபர் டிவீட் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைபர்
டிவீட் இணையதளத்தில் இருந்து இந்த நீட்டிப்பு சேவைக்கான டுல் பாரை
டவுண்லோடு செய்து கொண்டால் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம்.
அதன் பிறகு 140 எழுத்து கட்டுப்பாடு இல்லாமல் விரும்பிய அளவில்
செய்திகளை வெளியிடலாம். சக பைபர் டிவீட் பயனாளிகள் இந்த பதிவுகளை படிக்க
முடியும். உறுப்பினர் அல்லாதவர்கள் படிப்பதற்காக தனியே அந்த பதிவுக்கான
முகவரி சுருக்கத்தையும் இந்த சேவை வழங்குகிறது.
குறும்பதிவு சேவையாக புகழ் பெற்று விளங்கும் டிவிட்டரின் பலம் பலவீனம்
இரண்டுமே அதன் 140 எழுத்து வரம்பு தான். பெரும்பாலான டிவிட்டர் பயனாளிகள்
இந்த வரம்புக்குள் தகவல்களை பகிந்து கொள்ள பழகிவிட்டாலு சில நேரங்களில் 140
எழுத்து என்பது கையை கட்டிப்போட்டது போல உனர வைக்கலாம்.
அத்தகைய நேரங்களில் கூடுதல் எழுத்துக்களோடு செய்தியை பகிர்ந்து கொள்ள
உதவும் இந்த சேவை கைகொடுக்க கூடும். ஆனால் டிவிட்டரின் வீச்சை இதனிடம்
எதிர்பார்க்க முடியாது.
0 comments:
Post a Comment