Sunday, August 7, 2011

பேஸ்புக் இணையதளம் விதிமுறை மீறுவதாக குற்றச்சாட்டு

பேஸ் புக் சமூக இணையத்தளம் உலகம் முழுவதும் உள்ள இணையத்தள பயன்பாட்டாளர்களால் வரவேற்க்கப்பட்ட வெப்சைட்க்கும். இந்த இணையத்தளத்தின் முகம் அங்கீகாரம் சார்ந்த சாப்ட்வேர் தனி மனித உரிமையை மீறுவதாக உள்ளது.

இவை புள்ளி விவர சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. இந்த இணையத்தளத்திற்கு ஹம்பர்க் புள்ளி விவர பாதுகாப்பு அதிகாரி ஜோகனஸ் காஸ்மர் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் முழு அங்கீகார திட்டத்தில் ஜெர்மன் ஈடுபடுத்தக் கூடாது. இதுவரை உள்ள புள்ளி வவிரங்களையும் அழிக்க வேண்டும். பேஜ் புக் இணையத்தளம், ஜெர்மனி அரசு உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில் 3 லட்சம் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த அபராத மதிப்பு 2 லட்சத்து 62 ஆயிரம் பவுண்ட் ஆகும். பேஸ்புக் இணையதளத்தின் முக அங்கீகார சாப்ட்வேர் ஜூன் மாதம் எலகம் முழுவதும் உள்ள 50 கோடி இணையத்தள உறுப்பினர்களுக்கு சென்றது.
புள்ளிவிவர பாதுகாப்பு அதிகாரி காஸ்பரின் கருத்துக்கு ஜெர்மனி பெடரல் நுபர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய மற்றும் ஜெர்மனி புற்றி விவர தரநிலையை பேஸ்புக் இணையத் தளம் கடைபிடிக்க வேண்டும் என அந்த அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஓன்லைன் டைரக்டரியை ஹார்வர்டு பல்கலை மாணவர்களுக்காக 2004 ஆம் ஆண்டில் மார்ச் சுகர் பெர்க் அமைத்தார். தற்போது இந்த டைரக்டரியில் பேஸ் புக் மூலமாக 750 கோடி போட்டோக்கள் இடம் பெற்று உள்ளன.

0 comments:

Post a Comment