Sunday, August 21, 2011

பூமிக்கு வெளியே சுற்றுலாவைக் கழிக்க ரஷ்யாவின் விண்வெளி ஹொட்டல்

வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
நமது பூமியில் பல சுற்றுலா இடங்களை பார்த்த பின்னர் புதிதாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்பது மனித இயல்பு.

இன்னும் கொஞ்ச காலத்தில் உங்கள் விடுமுறையை விண்வெளி ஹொட்டலில் தங்கி கொண்டாடலாம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் 4 கேபின் கொண்ட7 பேர் தங்கக் கூடிய விண்வெளி ஹொட்டலை கட்ட முடிவு செய்துள்ளது.
பூமி சுற்றுவட்டப்பாதையின் வான்வெளியில் 217 மைல் தொலைவில் இந்த விண்வெளி ஹொட்டல் அமைக்கப்படுகிறது. இதில் பெரும் ஜன்னல்கள் அமைக்கப்பட்டு பூமியின் காட்சிகளை பார்க்க முடியும். 2016ம் ஆண்டு முதல் இதில் தங்க முடியும். இந்த சாகச சுற்றுலாவுக்கு சோயுஸ் ராக்கெட் மூலம் இரண்டு நாட்கள் பயணிக்க வேண்டி இருக்கும்.
இந்த விண்வெளி ஹொட்டல் பயணம் பட்ஜெட் சுற்றுலாவாக இருக்காது. 5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் ஆகும். பயண கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகும்.
விண்வெளியில் உடல் எடை இருக்கதாததால் அங்கு சமதளபடுக்கை அல்லது நேராக நிற்கும் படுக்கையை தேர்வு செய்யலாம். சுற்றுலா பயணிகளுடன் அனுபவம் வாய்ந்த குழுவினரும் வருவார்கள்.
பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அங்கு மைக்ரோஓவனில் சுடவைத்து சாப்பிடலாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர் பழரசம் ஆகியவையும் கிடைக்கும். மது குடிக்க தடை உள்ளது. கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது.

0 comments:

Post a Comment