அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030ம் ஆண்டில்
செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5
வருடங்கள் நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா
ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே தேவையான உணவை சமாளிப்பது
குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு
தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர்
நாசா விண்வெளி உணவு சோதனைக்கூடத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை
விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment