Sunday, August 28, 2011

மொஸில்லா தடுக்கும் ஆட் ஆன் புரோகிராம்கள்

தன்னுடைய பயர்பொக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8னை மற்ற மென்பொருள் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது.
பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் அனுமதித்த பின்னரே அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும். சில மென்பொருள் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத வகையில் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக ஸ்கைப் புரோகிராமில் இணைத்துத் தரப்பட்டிருந்த ஆட் ஆன் புரோகிராம், பயர்பொக்ஸ் பிரவுசர் பல முறை கிராஷ் ஆகும் விளைவினைத் தோற்றுவித்தது. இதனால் அதனை அடியோடு விலக்க மொஸில்லா நடவடிக்கை எடுத்தது.
2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் சத்தமில்லாமல் பயர்பொக்ஸ் பிரவுசரில் ஒரு ஆட் ஆன் புரோகிராமினை இணைத்தது. இதனை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இது போல மென்பொருள் புரோகிராமுடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்களில் சில மட்டுமே பிரவுசருடன் இன்ஸ்டால் செய்திட அனுமதி கேட்கின்றன. மற்றவை அனுமதியின்றி இன்ஸ்டால் ஆகி தொல்லைகளைத் தருகின்றன.
பிரவுசர் மெதுவாக இயக்கத்திற்கு வருதல், இணையப் பக்கங்கள் தோன்ற அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகளை இந்த ஆட் ஆன் புரோகிராம்கள் உருவாக்குகின்றன. பயனாளர்கள் இவற்றை உணரும் பட்சத்தில் இவை இயங்காமல் தடுக்கவும் அவர்களால் இயலுவதில்லை.
எனவே தான் மொஸில்லா நவம்பர் மாதம் வெளியிடப்பட இருக்கும் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்பு 8 முதல் பயனாளர்களின் அனுமதியின்றி இத்தகைய ஆட் ஆன் புரோகிராம்கள் இன்ஸ்டால் ஆக அனுமதி தராத வகையில் தன் பிரவுசரை வடிவமைக்க இருக்கிறது.

0 comments:

Post a Comment