கிறிஸ் பூதம் என்கிற சந்தேகத்தில் குருணாகலில் நிகவெரட்டிய பகுதியில்
பிக்கு ஒருவர் பொதுமக்களால் நேற்று இரவு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
இவர் வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில்
நடமாடி இருக்கின்றார். தாய் ஒருவரும், இளம் யுவதியான மகள் ஒருவரும்
வாழ்கின்ற வீடு ஒன்றின் மீது பிக்குவின் நோட்டம் இருந்தது. உஷார் அடைந்தனர்
பொதுமக்கள். 500 பேர் வரை சுற்று வளைத்து பிக்குவை பிடித்தனர். பிக்குவின்
உடைமையில் மதுபான போத்தல்கள் இருந்தன. பிக்கு பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டார். இவருக்கும் வீட்டில் இருந்த இளம் யுவதி நீண்ட நாட்களாக
கள்ளத் தொடர்பு இருந்து வருகின்றது என பின்புதான் தெரிய வந்தது.
0 comments:
Post a Comment