தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் இப்போது புதிய முறையை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2 மாதத்திலேயே
குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம்(டி.என்.ஏ.) 1 1/2
மாதத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள்
கூறுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். 6500 கருவுற்ற
பெண்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99
சதவீதம் சரியாக குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் ஆரம்பத்திலேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து
தாய்க்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment