Saturday, August 13, 2011

காலையில் எழுந்ததும் சிகரெட் புகைப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்

பொதுவாக சிகரெட் பிடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதே நேரத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் சிகரெட் பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு நுரையீரல், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் புற்று நோய் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஹெர்சியில் உள்ள பென்ஸ்டேட் மருந்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஜோசுவா முஸ்கட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது.
அதிகாலை நேரத்தில் சிகரெட் பிடிப்பதால் அதில் உள்ள நிகோடின் மற்றும் புகையிலையின் நச்சு பொருட்கள் உடலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அதனால்தான் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment