வானத்தில் இருக்கும் விண்மீன்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.
விண்மீன்களின்
உலகம் சற்றே வித்தியாசமானது, புதுமையானது என்று பொதுவாக சொல்லாமல்
நேரடியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் பற்றியும் அதைப்பற்றிய கூடுதல்
தகவல்களையும் நமக்கு கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.
வானத்தை அண்ணாந்து பார்த்து பிரமிப்பை ரசித்துக்கொண்டிருக்கும் நமக்கு
அனைத்து விதமான வானியல் துறைகளிலும் உண்மையான அறிவியல் தகவல்களை படங்களுடன்
கொடுத்து ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் வானில் உள்ள ஒவ்வொரு கிரகங்கள் பற்றியும்
விரிவாக தெரிந்து கொள்ளலாம். கேலக்ஸி பற்றிய அனைத்து விபரங்களையும்
இத்தளத்தில் சென்று தேடலாம்.
கேலக்ஸிகளை வகைகளாக பிரித்து ஒவ்வொரு கேலக்ஸி பற்றியும் அறிவியல்
ரீதியான விளக்கங்கள் மற்றும் படங்கள் வரலாற்றில் இந்த கேலக்ஸி பற்றி ஏதாவது
தகவல்கள் இருக்குமானல் அதையும் விரிவாக சொல்கிறது.
ஒவ்வொரு கிரகங்களும் சுழலும் திசை எந்த மாதத்தில் எங்கு செல்லும்
முப்பரிமாண படங்களுடன் காட்டுகிறது. புதுமை விரும்பிகள் முதல் வானியல்
துறைப்பற்றி விரிவாக விளக்கங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
0 comments:
Post a Comment