Sunday, August 28, 2011

பேஸ்புக்கின் Recommendations விட்ஜெட்டை பிளாக்கரில் இணைக்க

பிளாக்கரில் பல தேவையில்லாத விட்ஜெட்டுக்களை சேர்த்து இருப்போம். ஆனால் பயனுள்ள நம்முடைய பிளாக்கரின் Page Views அதிகர்க்க கூடிய சில விட்ஜெட்டுக்களை சேர்க்காமல் இருப்போம். அந்த வரிசையில் இடம்பெறுவது இந்த பேஸ்புக்கின் Recommendations விட்ஜெட். நாம் பேஸ்புக்கில் பகிரும் பதிவுகளில் மற்றவர்களால் அதிகமான பரிந்துரை செய்யப்படும் பதிவுகள் இந்த விட்ஜெட்டில் வரிசை படுத்துவதால் வாசகர்கள் இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். இந்த விட்ஜெட்டை பிளாக்கில் சேர்ப்பதால் கண்டிப்பாக உங்களுடைய Page Views அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 
  • இந்த விட்ஜெட்டை உங்கள் பிளாக்கரில் இணைக்க பேஸ்புக்கின் இந்த லிங்கில்Facebook Recommendations செல்லுங்கள்.
  •  விண்டோ வரும் முதல் கட்டத்தில் உங்களுடைய பிளாக்கின் URL கொடுக்கவும்.
  • Width, Height - இரண்டும் விட்ஜெட்டின் அளவுகளை தேர்வு செய்ய.
  • Header - விட்ஜெட்டின் தலைப்பு பகுதி தேவயில்லை என்றால் டிக் மார்க்கை நீக்கி விடுங்கள்.
  • Color Scheme - டெம்ப்ளேட்டின் நிறத்திற்கு ஏற்ப விட்ஜெட்டின் நிறத்தை தேர்வு செய்து கொள்ள. கருப்பு நிற டெம்ப்ளேட் உபயோகித்தால் Dark என்பதை தேர்வு சீது கொள்ளுங்கள்.
  • Border color- பார்டரின் நிறத்தை தேர்வு செய்ய 
இதில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்த பின்னர் கடைசியாக உள்ள Get Code என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இரண்டு கோடிங் வந்திருக்கும் அதில் இரண்டாவதாக உள்ள XFBML கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.


இந்த கோடிங்கை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Add a Gadget - Html JavaScript - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். 

பின்னர் Save பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் பேஸ்புக்கின் Recommendations விட்ஜெட் உங்கள் பிளாக்கரில் சேர்ந்து இருக்கும். தேவையென்றால் விட்ஜெட்டை உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைத்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment