Sunday, August 14, 2011

ரெட் புல்(Red Bull) குடிப்பவரா நீங்கள்.? எச்சரிக்கை..!

ரெட்புல், க்லவுட்9 போன்ற (ஆற்றல்) எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுப்புற சுகாதார மையம் 16 வகையான இதுபோன்ற பானங்களைக் கடைகளில் வாங்கி சோதனை கூடங்களில் வைத்து சோதனை செய்ததில் ஒவ்வொரு பானங்களின் லேபில்களிலும் குறிபிட்டுள்ள…, அதாவது அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் கூடுதலாக கெஃபைன் என்ற மூலப்பொருளைச் சேர்த்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
“ஒருவர் பருகும் ரெட்புல் எனர்ஜி பானத்தில், ஒரு கப் காஃபி சாப்பிடுவதற்குச் சமமான அளவிலேயே, கெஃபைன் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது” என்று, ரெட்புல் நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் “இதே வகையில்தான் சுமார் 160 நாடுகளில் உள்ள எங்களின் நிறுவனங்களில் இப்பானம் தயாரிக்கப்படுகிறது” எனவும் ரெட்புல் நிறுவனம் கூறுகிறது. இதன் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், “இது போன்ற பானங்கள் பருகுபவர்கள், அவர்களுடைய மனது உஷார் நிலையில் இருப்பதற்கும், அவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவதற்கும் விளயாட்டுப்போட்டிகளில் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் உதவுகிறது. ஆனால் அதிகமான் காஃபின் பருகுவதால் கடுமையான உடல் நல் பாதிப்பு ஏற்படலாம்” எனவும் கூறுகின்றனர்.
உணவு கலப்பட தடுப்பு சட்டம் 1954 திருத்தம் 37-A (2) ன் படி…, இது போன்ற குளிர் பானங்களில், 145(ppm) அளவுக்கு மேல் கெஃபைன் மூலப்பொருள் சேர்க்கக்கூடாது என, வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து ரெட்புல் நிறுவனம், “தாங்கள் தயாரிக்கும் பானத்தில் சுமார் 320(ppm) அளவில் கெஃபைன் சேர்க்க அனுமதிக்க வேண்டும்” எனக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இதிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் இலாபக்கண்ணோட்டத்தில் மட்டுமே இயங்குன்றன எனவும் அவற்றுக்கு மக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது.

அவரவர் ஆரோக்கியத்தை அவரவர்தான் பேண வேண்டுமென்பது சரிதான். ஆனால், தங்கள் நாட்டு மக்களுக்குக் கேடுவிளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசுகள் அனுமதிக்காமலிருப்பதே சரியான மக்கள் அரசின் தர்மமாகும். இதனைக் கருத்தில்கொண்டு, இத்தகைய எனர்ஜி பான நிறுவனங்களை முழுமையாக கண்காணிப்பு வட்டத்தினுள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

0 comments:

Post a Comment