1972இல் Ed Catmull மற்றும் Fred Parke ஆகியோரால் iixer நிறுவனத்தினால்
முதலாவது எண்ணியல் முறைமை உருவாக்கப்பட்டது. இதுதான் முப்பரிமாண இயக்கத்
தொழிநுட்பத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.
இங்கு காணப்படும் படங்களின் முப்பரிமாணம் 1972 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட 40 வருடப் பழமையானவையாகும்.
இவையே பின்னர் Star Wars, Superman மற்றும் Tron போன்ற புகழ்பெற்ற
திரைப்படங்களின் தொழிநுட்பங்கள் எல்லாம் இதன் அடிப்படையிலிருந்து வந்தவையே.
றொபி என்பவர்தான் 8 மி.மீ நாடாவில் திரைப்படத்தினைப் பதிவதைக்
கண்டுபிடித்தார். பின்னர் அதனை எண்ணியலாக்கி குறுகிய விவரணத்திற்குள்
அதனைக் கொண்டுவந்தார்.
முதலில் இது ஒரு சுழலும் முப்பரிமாணப் பரப்பினைக் காட்டுகின்றது.
பின்னர் அது கையின் மாதிரி உருவத்தின் தளங்களை பல்கோண வடிவில்
விளக்குகின்றது.
உலகின் முதலாவது முப்பரிமாணத் திரைப்படமான Toy Story இனை 33 வருடங்களின்
பின்னர் உருவாக்க இது வழிவகுத்தது. இதன் பின்னர் 1993 இல் Jurasic Park
இனை வெளியிடவும் இது வழிவகுத்தது.
இன்று முப்பரிமாண செயற்பாட்டாளர்களும் நிகழ்ச்சி நிரலியலாளர்களும்
photo-realistic விம்பங்களை உருவாக்கினாலும் 1972இல் கிடைத்த வலுமிக்க
கணணிகளுக்கு இவை இன்னும் உதவுகின்றன எனலாம்.
அப்போதைய சுப்பர்-கம்பியூட்டர்களில் 800MB கொள்ளளவே இருந்தது. ஆனால்
தற்போதைய கையடக்கத் தொலைபேசியிற்கூட இவற்றைவிடவும் அதிகளவு கொள்ளளவு
காணப்படுகின்றமை முன்னேற்றத்தையே காட்டுகின்றன.
0 comments:
Post a Comment