Friday, September 23, 2011

பேஸ்புக் சந்தை அழைக்கிறது

எதையுமே “நண்பர்கள்’ வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளும் காலம் இது. நண்பர்கள் என்றால் பேஸ்புக் உலகில் அறிமுகமானவர்கள்.
கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோ, ஆலோசனை கேட்பதோ பேஸ்புக் நண்பர்கள்தான் உலகம் என்றாகி வருகிறது.
இனி பொருட்களை விற்பது என்றாலும், இந்த நண்பர்களிடமே விற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களையும் நண்பர்களிடம் இருந்தே வாங்கிக் கொள்ளலாம்.
இப்படி ஒருவரது பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தையே அவர்களுக்கான விற்பனை களமாக மாற்றிக் கொள்ளும் சந்தையாக கீப்பியோ (டுஞுஞுணீடிஞி) இணையதளம் உருவாகி உள்ளது.

கீப்பியோ மூலம் நீங்கள் உங்கள் வசம் உள்ள விற்பனைக்குரிய பொருட்களை பேஸ்புக் நண்பர்களிடம் விற்பனை செய்யலாம்.
அதாவது உங்கள் வசமுள்ள உங்களுக்கு பயனில்லாத ஆனால் மற்றவர்களுக்கு பயனுள்ள பொருட்களை அப்படி யாருக்கு அது தேவை என்பதை பேஸ்புக் மூலம் காண்பித்து விற்பனை செய்வதை “கீப்பியோ’ சாத்தியமாக்குகிறது.
அந்த பொருள் பேட்டரி நிலைத்து நிற்கும் உங்கள் பழைய நோக்கியா செல்போனாக இருக்கலாம். அல்லது பரிசாக வந்த மேலும் ஒரு புத்தம் புதிய பிளாஸ்க்காக இருந்தால் அல்லது படித்து முடித்த நாவலாக இருக்கலாம். மதிப்பும் பயன்பாட்டு தன்மையும் கொண்ட ஏதோ ஒரு பொருளாக இருக்கலாம்.
இத்தகைய பொருள்/பொருட்கள் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்.
“இ’பே போன்ற ஏல தளத்தின் மூலமாகவோ (அ) கிரேக்லிஸ்ட் போன்ற வரி விளம்பர தளம் மூலமாகவோ அவற்றை விற்பனை செய்யலாம். இவற்றைத்தான் பலரும் செய்கின்றனர் என்றாலும் இபே, கிரேக்லிஸ்ட் இரண்டிலுமே சிக்கல்கள் இருக்கின்றன.
இபே போன்ற தளங்களை பொருத்தவரை ஏலத்திற்கு பொருட்களை பட்டியலிடவே கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இபேவில்
வெற்றிகரமாக ஏலத்தை முடிக்க
சூட்சமமும் தெரிந்திருக்க வேண்டும். வரி விளம்பர தளங்கள் இலவசமானது என்றாலும் முன்பின் தெரியாதவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடவும் நேரிடலாம்.
இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் பேஸ்புக் நண்பர்கள் மத்தியில் பொருட்களை விற்க வழி செய்கிறது கீப்பியோ.
எந்த பொருளை விற்க விரும்புகிறீர்களோ அதைப் பற்றிய தகவலை இந்த தளம் மூலமாக பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். எந்த நண்பருக்கு அந்த பொருள் தேவையோ அவர் அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது தனது நண்பர்களில் யாருக்கேனும் பரிந்துரை செய்யலாம்.
இதே போல உங்கள் நண்பர்கள் விற்க விரும்பும் பொருள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் அதனை வாங்கிக் கொள்ளலாம். அமெரிக்கா சென்று வந்த நண்பர் அங்கு வாங்கிய ஐபோனையோ, ஐபேடையோ விற்க முன் வந்தால் அதை வாங்கிக் கொள்ள யோசிப்பீர்களா என்ன? ஐபிஎல் போட்டி (அ) புதுப்படத்துக்கான டிக்கெட்டை தன்னால் பயன்படுத்த முடியாவிட்டால் விற்க முன்வந்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்ள முன்வருவீர்கள் இல்லையா?
இதுதான் கீப்பியோவின் நோக்கம்.
இப்போதே கூட பேஸ்புக்கில் சிலர் தங்கள் வசமுள்ள பொருட்களை விற்க விரும்புவதாக தகவல் வெளியிடவே செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வழக்கம் அதிகம் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பேஸ்புக்கில் பகிரப்படும் போது இந்த தகவல் புதிய தகவல்களால் பின்னுக்கு தள்ளப்பட்டு மறைந்து போய் விடும்.
கீப்பியோவில் அவ்வாறு பகிர வாய்ப்பில்லாமல் நேரடியாக நட்பு வட்டாரத்தோடு பகிர்ந்து கொள்ள முடியும்.
இப்படி பொருட்களை நண்பர்கள் வட்டத்தில் விற்பதோடு கைவசம் உள்ள பொருட்களை பட்டியலிட்டு அவை பற்றிய குறிப்புகள் எழுதி அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் கீப்பியோ பயன்படுத்தலாம். புதிய பொருட்கள் வாங்கும் போது அவற்றின் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் சாத்தியமாகும் உரையாடல் மூலமாக புதிய பொருட்களின் மதிப்பு குறித்து சரயின தகவல்களை தெரிந்து கொண்டு நல்ல பொருட்களை தேர்வு செய்து வாங்கலாம்.
மொத்தத்தில் பேஸ்புக் நட்பு வட்டத்தையே சந்தையாக மாற்றி தருகிறது கீப்பியோ. ஆனால் வணிக நோக்கம் முன்னிலை பெறாத நண்பர்களின் சந்தை.

0 comments:

Post a Comment