புதிதாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் முதல் வேலையாக
செய்வது லோகோ என்று சொல்லக் கூடிய நிறுவனத்திற்கான ஒரு அடையாள சின்னம்
உருவாக்குவது தான். இதற்காக பல நிறுவனத்தின் லோகோ தேடிச் சென்று பார்த்து
எப்படி வடிவமைத்திருக்கின்றனர். நாம் இதை விட சிறப்பாக எப்படி
வடிவமைக்கலாம் இது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக ஒரு தளம் உள்ளது.
நிறுவனம் ஆரம்பித்தாச்சு ஆனால் இன்று வரை நாம் லோகோ என்ற ஒன்று
வைக்கவில்லை. இதற்கு காரணம் நம் நிறுவனத்திற்கு தகுந்தாற் போல் லோகோ
கிடைக்கவில்லை என்று சொல்லும்.

அனைவருக்கும் உங்கள் விருப்பபடி நீங்கள் எந்தத்துறை சார்ந்தவராக
இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காக ஒன்றல்ல இரண்டல்ல 20 இலட்சம் லோகோக்களை
நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது. இந்தத்தளத்திற்கு சென்று
Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க வேண்டுமோ அந்த
வார்த்தையை கொடுத்து Seek
என்ற பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும்
திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள்
கிடைக்கும். இதிலிருந்து நம் நிறுவனத்தின் லோகோ எப்படி இருந்தால் நன்றாக
இருக்கும் என்ற ஒரு ஐடியாக கிடைக்கும். கண்டிப்பாக இந்தப்பதிவு லோகோ
உருவாக்க நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Go To Website:-
Http.//seeklogo.com
Related Posts: ,
0 comments:
Post a Comment