நாம் அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட
அனைத்து சேவைகளுமே கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை தான்.
நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான்.
அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து
தகவல்களையும் ஒரே இடத்தில் பக்-அப் எடுக்கலாம். இதனை செய்ய பின்வரும்
வழிமுறைகளை பின்பற்றவும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.
2. அதில் உங்கள் ப்ரொபைல் அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும்.
அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனலில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.
4. இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5. ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment