விஞ்ஞானியொருவர் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை
அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆடைத்தொழிற்துறையுடன் கைகோர்த்துள்ளார்.
ஜேர்மனி, ஹனோவரைச் சேர்ந்த விஞ்ஞானியான அன்கி டொமாஸ்க் (வயது 28) எனும்
பெண்ணே இவ்வாறான பாலினால் தயாரிக்கப்பட்ட ஆடையை பெஷன் உலகிற்கு
அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவர் பாலுடன் வேறு பல பதார்த்தங்களையும் சேர்த்து
விசேட உயிரியல் ஆடைகளை உருவாக்கியுள்ளார். இந்த ஆடைகள் பெஷன்
தொழில்துறையில் புதிய வகையான போக்காக அமையுமென அவர் கூறியுள்ளார். பாலினால்
தயாரான இந்த புடைவையானது தோலை சிறப்பாக பேணும் புரதத்தையும் கொண்டுள்ளது
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment