Monday, October 10, 2011

நட்சத்திரங்கள் மோதுவதால் உருவாகும் காமா கதிர்களால் ஆபத்து

வான்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் அதில் இருந்து பல டன் சக்தி வாய்ந்த காமா கதிர்கள் உருவாகுகின்றன.

அதிக நச்சுத்தன்மை வாய்ந்த கதிர் வீச்சினால் பூமி அழியும் விடும் ஆபத்து ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் காமா கதிர்களின் கதிர் வீச்சு பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தை முழுமையாக வற்றிப் போக செய்யும் என தெரியவந்தது.
இதனால் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாக பூமியில் விழும். அதனால் பூமியில் வாழும் உயிரினங்களின் மரபு தன்மையில் மாற்றம் ஏற்பட்டு அவை அழியும் என தெரிவித்து இருந்தனர்.

0 comments:

Post a Comment