Wednesday, October 26, 2011

வீட்டுக்குள்ளேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

வெளியே செல்லாது வீட்டுக்குள்ளே இருந்து விளையாடும் சிறுவர்களது கண்பார்வை, வெளியே சென்று விளையாடுபவர்களைப் போலன்றி குறைவாகவே இருக்கும் என கண்வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்தே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இயற்கை ஒளிக்கு உடலை தோற்றுவதும், தூரப்பார்க்கும் சந்தர்ப்பமும் இக்குறைபாடு இல்லாதிருப்பதற்குரிய காரணம் என தெரியவந்துள்ளது.
ஏறக்குறைய 10,000 பிள்ளைகளை ஆய்வில் ஈடுபடுத்தியதன் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வாளர்கள் தங்களது பெறுபேறுகளை கண்பார்வை சம்பந்தப்பட்ட அமெரிக்க பல்கழைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment