தலைவலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் உள்ளிட்ட வலி
நிவாரணியை தேடுவோருக்கு விரைவில் பார்வை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது
என்கிறது ஒரு ஆய்வு.
“மாக்யுலர் டீஜெனரேஷன்” எனப்படும் இந்த பாதிப்பால் பார்வை குறைபாடு படிப்படியாக அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக இந்த பாதிப்பு வயதானவர்களை அதிகம் தாக்கும். ஆனால், ஆஸ்பிரின்
அடிக்கடி எடுத்துக் கொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் இந்த பாதிப்பு
ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய சேர்ந்த கண் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்
இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையாக இருந்தால் மட்டுமே
வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று
அறிவுறுத்துகின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு கண் பரிசோதனை செய்வதும் அவசியம் என்கின்றனர்.
0 comments:
Post a Comment