Sunday, October 30, 2011

கடலுக்கு அடியில் ஒரு செல் உயிரினமான அமீபா கண்டுபிடிப்பு

ஒரு செல் உயிரினம் அமீபாவை பசிபிக் கடலை ஒட்டிய நிலப்பரப்பின் ஆழ்பகுதியில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செனோபியோபோரஸ் என்ற விலங்கியல் பெயர் கொண்ட இந்த உயிரினம் பொதுவாக அதிக அளவில் காணப்படுவது கடலின் ஆழமான பகுதிகளில் தான்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
இத்தகைய உயிரினங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மிக அதிக ஆழத்தில் மட்டுமே உயிர்வாழக்கூடிய ஒரே உயிரினம் என்பது இதன் சிறப்பம்சம். இந்த உயிரினங்கள் குறித்த மேலும் பல அரிய தகவல்கள் தொடர் ஆய்வில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் பசிபிக்கடலில் மரியானா ட்ரென்ச் பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்ட குழுவினர் மிகப்பெரிய அமீபா இருப்பதை கண்டறிந்து கூறியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment