![Bildschirmfoto 2011-10-30 um 23.09.15](http://puthiyaulakam.com/wp-content/uploads/2011/10/Bildschirmfoto-2011-10-30-um-23.09.15.png)
இணையத்தில் இருப்பதில்லை அதனால் நமக்கு வரும் மின்னஞ்சல்கள் இல்லாம் நம் கணக்கில் குவிந்துக் கொண்டே போகும் இதனால் நாம் பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் சில கடைசியாக போய்விடும்.
இதனால் நாம் அந்த மின்னஞ்சல்களுக்கு தாமதமாக பதில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை வருகிறது. அது மட்டுமல்ல சில மின்னஞ்சல்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்போம். அந்த மின்னஞ்சல் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்றே நாம் ஒவ்வொரு முறையும் நம் கணக்கில் நாம் சென்று பார்க்க வேண்டியுள்ளது. இதற்க்கு ஒரு தீர்வை WAY2SMS.COM நமக்கு தருகிறது. இந்த தளம் நமக்கு வரும் மின்னஞ்சல்களை நம் கைபேசிக்கே குறுஞ்செய்தி அனுப்புகிறது.இந்த தளத்தை பற்றி பல நபர்களுக்கு தெரியும். இந்த தகவல் இதனை பற்றி அறியாதவர்களுக்கு.
மின்னஞ்சல்களை குறுஞ்செய்தி மூலம் பெருவதற்க்கு :
மேலே உள்ள சுட்டியை அழுத்தி அதில் பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைபேசி எண்னை அதில் பதிவு செய்யுங்கள். உங்கள் எண் பதியப்பட்ட உடன் உங்கள் கைபேசிக்கு இந்த தளத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்கள் கைபேசி எண்ணை உறுதிசெய்யுங்கள்.
பின்னர் உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள் அதில் மேலே வலது புறத்தில் MAIL ALERTS என்பதை சொடுக்குங்கள் பின்னர் வரும் பக்கத்தில் ACTIVATE என்ற பொத்தானை அழுத்துங்கள்.
அதன் கீழே நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். இதன் மூலம் நீங்கள் எந்த மின்னஞ்சல்களில் இருந்தும் மின்னஞ்சல் எச்சரிக்கை பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியது இல்லாம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பார்வார்ட் செய்யுங்கள்.
உங்கள் மெயில் கணக்கின் SETTINGS பக்கத்திற்கு செல்லுங்கள் அதில் உள்ள FORWARDING என்பதை சொடுக்கி அதில் ADD A FORWARDING ADDRESS என்பதை சொடுக்கி அதில் அந்த தளத்தில் கொடுத்துள்ள முகவரியை கொடுங்கள் அவ்வளவு தான். இதில் ஜிமெயில், யாஹூ மற்றும் மற்ற மின்னஞ்சல்களில் எவ்வாறு பார்வார்ட் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருப்பர்கள். அதைப் போல் செய்தால் போதும் நாம் மிகவும் எளிதாக மின்னஞ்சல் எச்சரிக்கை பெற்றுவிடலாம்.
மேலும் இந்த தளத்தில் இருந்த படியே நாம் நம் ஜிமெயில் மற்றும் யாஹூ மின்னஞ்சல்களை படிக்கலாம். இந்த வசதியை இந்த தளம் நமக்கு அளிக்கிறது. இந்த தளம் மூலம் நாம் இலவசமாக இந்தியா முழுவதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment