Tuesday, November 29, 2011

புயல் காற்றினால் செவ்வாய் கிரகத்தில் உருவான மணல் குன்றுகள்: ஆராய்ச்சியில் தகவல்

அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜோன்ஸ்காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி நாதன் பிரிட்ஜஸ் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் மிக பலத்த புயல் காற்று வீசுகிறது.
அதனால் அங்கு பறக்கும் மணல்கள் குன்றுகளாக உருவாகியுள்ளன. மேலும் மணலும் அலைகளாக மாறி அடுக்கடுக்காக தெரிகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மணல் குன்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் அவை தானாக உருவானது என கூறிவந்தனர். தற்போதுதான் அவை புயல் காற்றினால் ஏற்பட்டவை என கண்டுபிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment