Friday, December 16, 2011

6 கோடி ஆண்டு பழைய டைனோசரின் பல் ரூ.29 லட்சத்துக்கு ஏலம் !

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் டைனோசர். இந்த வகையை சேர்ந்தது டைரனோசரஸ் ரெக்ஸ். ரெக்ஸ் என்றால் லத்தீனில் அரசன். அதாவது, டைனோசர் வகையறாக்களிலேயே கம்பீரமான விலங்கு. வடஅமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் அந்த நாட்களில் அதிகம் உலா வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள், புதைந்துபோன டைரனோசரஸ் படிமங்கள் இப்போதும் அவ்வப்போது கிடைக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் மான்டனா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு விவசாய நிலத்தை தோண்டும்போது பிரமாண்ட பல் ஒன்று கிடைத்தது. அது 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைரனோசரஸ் ரெக்ஸ் விலங்கின் பல் என்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். அது 337.8 கிராம் எடை இருந்தது. லாஸ்ஏஞ்சல்சில் உள்ள போன்ஹம்ஸ் நிறுவனம் மூலம் அந்த பல் தற்போது ரூ.29.88 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. டைனோசர் இன விலங்கின் பல் இந்த அளவு அதிகம் ஏலம் போனது இது முதல் முறை என்று போன்ஹம்ஸ் அதிகாரிகள் கூறினர்.

0 comments:

Post a Comment