Tuesday, December 13, 2011

ஒவ்வொரு நொடிக்கும் விக்கிப்பீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு

விக்கிப்பீடியா என்பதற்கு பதில் தகவல்களின் களஞ்சியம் என்று கூறலாம். நமக்கு எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் இணையத்தில் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை.

இந்த தளத்திற்கு சென்று தேடினால் நிச்சயம் அதற்கான பதில் கிடைக்கும். இந்த விக்கிப்பீடியா தளம் பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது.
ஒவ்வொரு நிமிடத்திறக்கும் பல நூற்றுக்கணக்கான புதிய தகவல்கள் பதிவேற்றப்படுகிறது. இந்த விக்கிப்பீடியா தளத்தில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது. என்னென்ன புதிய தகவல்கள் பகிரப்படுகிறது என அறிய Wikistream என்ற ஒரு புதிய தளம் உதவி புரிகிறது.
இந்த தளத்திற்கு சென்றால் விக்கிப்பீடியா தளத்தில் என்னென்ன புதியதாக பதிவேற்றப்படுகிறது என்பதை அதற்கான புதிய லிங்கோடு காட்டுகிறது.
இந்த தளத்தில் விக்கிப்பீடியா அனைத்து மொழிகளிலும் புதியதாக என்ன பதிவேற்றி உள்ளது என காட்டி கொண்டே இருக்கும். அந்த லிங்கில் கிளிக் செய்தால் அதற்கான விக்கிப்பீடியா பதிவு திறக்கும் மற்றும் இதில் குறிப்பிட்ட ஒரு மொழியில் வெளியாகும் புதிய பதிவுகளை மட்டும் பார்க்க விரும்பினால் இடது ஓரத்தில் உள்ள All wikipedias என்பதை கிளிக் செய்து குறிபிட்ட மொழியை தெரிவு செய்தால் அந்த மொழியில் வெளியாகவும் புதிய பதிவுகளை மட்டும் காணலாம்.
இணையதள முகவரி

0 comments:

Post a Comment