சின்ன அம்மை நோய் பரவாமல் தடுக்கும் சக்தி சூரிய ஒளிக்கு உண்டு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சின்ன
அம்மை நோய் ஒருவித வைரசால் பரவுகிறது. அதை தடுக்க ஊசி மருந்து
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நோய்க்கு சூரிய ஒளி சிறந்த மருந்து
என தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த நிபுணர்கள் குழு சின்ன அம்மை நோய் தாக்கியவர்களிடம் ஒரு
ஆய்வு மேற்கொண்டனர். அவர்களை நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்க வைத்தனர்.
அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்தது.
அது மேலும் பரவவில்லை. ஏனெனில் அது வைரஸ் கிருமிகளை அழித்து அவற்றின்
நோய் பரப்பும் தன்மையை கட்டுப்படுத்தியது. எனவே சின்ன அம்மை நோயை
கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக சூரிய ஒளி திகழ்வதாக நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment